திருக்குறள் பேச்சு போட்டி

திருக்குறள் பேச்சு போட்டி நடந்தது

Update: 2022-11-22 20:46 GMT

நெல்லை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 292 மாணவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நடந்த விழாவுக்கு லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரிய சூசை தலைமை தாங்கினார். ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் மைதிலி முன்னிலை வகித்தார். ஸ்ரீராம் நிதி நிறுவன நெல்லை மண்டல மேலாளர் அருள்மணி வரவேற்றார். நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்