திருக்குறள் பேரவை கூட்டம்
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவையின் கூட்டம் நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக சிறப்புநிலை பேராசிரியர் நரேந்திரன், 'நல்ல வண்ணம் வாழலாம்' என்ற தலைப்பில் உடல்நலன் சார்ந்த பல்வேறு மருத்துவ குறிப்புகளை கூறினார். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் அறுவை சிகிச்சை பேராசிரியர் ரவீந்திரன் திருவள்ளுவரின் உள்கோட்பாடு என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை செய்தித் தொடர்பாளர் முத்துக்கனியன் தொகுத்து வழங்கினார். இணைச்செயலாளர்கள் இமயவரம்பன், தங்க செல்வராசு, செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முடிவில், பேரவை பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.