திருக்குறள் பேரவை கூட்டம்
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது;
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் மற்றும் கவியரங்கம் நடந்தது. கூட்டத்திற்கு பேரவையின் தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். கல்லூரியின் மாணவிகள் காவியா, சபிதா, சங்கவி, சியாமளா தேவி ஆகியோர் குறளும் பொருளும் என்ற தலைப்பில் பேசினர். தொடர்ந்து தமிழ் கவியரங்கம் நடந்தது. நிகழ்ச்சிகளை பேரவை உறுப்பினர் மதிவாணன் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.