திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஒரே நாளில் திருமணம்-மணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்ததால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-07-10 17:44 GMT

திருக்கடையூர்:

ஒரே நாளில் திருமணம்-மணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்ததால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருமணம்-மணிவிழா

இந்த நிலையில் நேற்று வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, திருமணம், யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இதனால் கோவிலில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்