சிவகிரி:
சிவகிரி இலக்கனேஸ்வரர் காந்தேஸ்வரி சமேதரர் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூலவருக்கு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்து வருகிறது. 5-ம் திருநாளான நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலையில் நடக்கிறது.