மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாணம்
திருவெண்காடு அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக வீர நரசிம்மர் செங்கமலவள்ளி ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். சன்னதி முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலில் சாமி எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு மேல தாளம் முழங்கிட எடுத்து வந்தனர். பின்னர் ஹோமம் நடந்தது. இதையடுத்ஞது வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் செங்கமலவள்ளி தாயாருக்கு மாங்கல்யத்தை அணிவித்து திருகல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்பட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.