குலசேகரநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.;

Update: 2022-10-25 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோவில் உடனுறை குலசேகரநாதர் கோவிலில் ஐப்பசி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று சுவாமி-அம்பாளுக்கு திருகல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி- அம்பாள் தனித்தனியாக கோவில் வளாகத்தில் உள்ள வசந்தபண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்