கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-11-03 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் நாளில் தாரகாசூரன் சம்ஹாரம் நிகழ்ச்சியும், 6-ம் நாளில் சூரசம்ஹாரமும் நடந்தது.

நேற்று முன்தினம் இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூ‌ஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. இரவில் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாண விருந்து நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்