பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-01-05 18:59 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி வேத மந்திரங்கள் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருமணம் நடைபெற்றது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ர தரிசன விழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்