அட்சயலிங்கசாமி கோவிலில் திருக்கல்யாணம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத மகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதற்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு அட்சய லிங்கசாமி மற்றும் சுந்தர குஜாம்பிகை எழுந்தருளினர். முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது. இதை தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள், மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடை பெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.