பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2022-09-18 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் ஆயிர வைசிய மஞ்ச புத்தூர் மகாசபைக்கு பாத்தியமான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி, அம்மன் திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், சிறப்பு ஹோமம், கன்னிகாதானம் நடைபெற்றது. சுவாமி அம்மன் கையில் இருந்த தங்கத் தாலியை திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்மன் பட்டாசாரியார் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பின்னர் வாரணம் ஆயிரம், நலுங்கு, விசேஷ தீபாராதணை, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பாண்டுகுடி, காரைக்குடி, மதுரை, ஆயிர வைசிய சமூகத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைகளை முரளி பட்டாச்சாரியார் கோவிந்தராஜன், நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள் நடத்தினர். மாலையில் பாண்டுகுடி ஹரி ராம பக்த பஜனை குழுவினரின் பஜனை மற்றும் பிருந்தாவன கோலாட்டமும், சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடந்தது. இதனையொட்டி லட்சுமி நாராயண பெருமாள் இளைஞர் சபை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிர வைசிய மகா சபை தலைவர் கோபால் செட்டியார் மற்றும் நிர்வாகிகள் லட்சுமி நாராயண பெருமாள் பரிபாலன சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்