ராமநவமியையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி

ராமநவமியையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-03-30 20:33 GMT

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநவமியையொட்டி காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்