திருக்கல்யாண நிகழ்ச்சி
விழுப்புரம் ரேணுகா அங்காளம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
விழுப்புரம்
விழுப்புரம் மார்க்கெட் வீதியில் பிரசித்தி பெற்ற ரேணுகா அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.