திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார்

Update: 2022-11-03 06:34 GMT


திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், முருக பெருமானை வழிபட்டார். அப்போது, வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்ட அமைச்சர், வாகனம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்