திருச்செந்தூர்- பாலக்காடு ெரயில் நடுவழியில் நிறுத்தம்
என்ஜின் பழுதால் திருச்செந்தூர்- பாலக்காடு ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.;
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ெரயில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் விருதுநகர் ெரயில் நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் வந்தபோது என்ஜின் பழுது காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. 1 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டு பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மாலை 4.45 மணியளவில் விருதுநகர் ெரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.