திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம் செய்தார்.;
திருச்செந்தூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன். இவர் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் வந்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹாரமூர்த்தி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.