மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி
மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 46-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. சென்னை குமரன் பதிப்பகம் பபாசி தலைவர் வைரவன் தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சுந்தர ஆவுடையப்பன் எழுதிய மார்கழி பெருமை என்ற நூலினை பிச்சைமுத்து வெளியிட்டார். அகில இந்திய வானொலி நிகழ்ச்சி இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் மறுபடியும் பிறப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.