தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது. பின்னர் கரும்பு லாரிகள் வருகிறதா? என ரோட்டில் அங்கும் இங்கும் சுற்றி வந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானையை அந்த வழியாக பஸ்சில் சென்ற பயணிகள் தங்கள் செல்போனில் படம் எடுத்தனர்.