திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2023-07-22 22:06 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை தமிழக, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. இதனால் இந்த மலைப்பாைத வழியாக தினமும் பஸ், கார், வேன், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்றுவருகின்றன. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், அதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு நேற்று மாலை ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. மாலை 6 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. பெரிய வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு இரவு 8 மணியளவில் லாரி சரிசெய்யப்பட்டது. அதன்பிறகே சுமார் 2 மணி நேரம் கழித்து திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்