திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை

திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது.

Update: 2023-10-10 23:56 GMT

தாளவாடி

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திம்பம் மலைபாதையின் உச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அரசு பஸ்சை வழிமறித்தது. இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை காட்டு யானை துரத்த தொடங்கியது. இதனால் காட்டு யானைக்கு பயந்து டிரைவர் பஸ்சை பின்னோக்கி நகர்த்தினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தால் கூச்சலிட்டனர். எனினும் ½ கிலோ மீட்டர் தூரம் வரை அரசு பஸ்சை காட்டு யானை துரத்தியது. இந்த காட்சியை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து இயக்கி பயணிகளை பாதுகாப்பாக தாளவாடியில் கொண்டு சேர்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்