தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்

ஆடி அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.;

Update: 2023-08-16 18:45 GMT

ஆடி அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது.

மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கி தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கை.

திதி கொடுத்து வழிபாடு

அதன்படி நேற்று ஆடி அமாவாசையொட்டி பிறக்க முக்தி தரும் தலமான திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் அதிகாலை முதல் திரளானோர் புனித நீராடினர்.

பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து வழிபட்டனர். இதனால் காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவில் எதிரே உள்ள திரி குளக்கரையில் ஈமச்சடங்கு மண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

திரிகுளக்கரையில் உள்ள ராமர் பாதத்திலும், 100 அடி உயரத்தில் உள்ள நந்தி தூணிலும் மாலை அணிவித்தும் வழிபட்டனர். சிவனுக்கு ஆத்ம சாந்தி அர்ச்சனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்