"வாட்ஸ் அப் கால் லாக் மூலம் என்னை கண்காணித்துள்ளனர்" - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிய சவுக்கு சங்கர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2022-11-29 15:52 GMT

சென்னை,

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிய சவுக்கு சங்கர், பின் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறும்போது,

சிறைவாசம் எனக்கு மன உறுதியை அளித்துள்ளது. அதன் தாக்கத்தை தனது செயல்பாடுகள் உணர்த்தும். வாட்ஸ் அப் கால் லாக் மூலம் என்னை கண்காணித்துள்ளனர். என்னோடு பேசிய காவல் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் அனைவரும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி- யால் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநில காவல் துறையும், மாநில உளவுத்துறையும், திமுக அரசுக்கு எதிராக யார் யாரெல்லாம் பேசுகிறார்கள், யார் அவர்களுக்கு தகவல்கள் தருகிறார்கள், யார் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த வாட்ஸ் அப் லாக்கை எடுத்து உபயோகிக்கின்றனர் என்ற தகவல் எனக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்