ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு காரியாபட்டிக்கு தான் வருகின்றனர். காரியாபட்டியில் கே.செவல்பட்டியில் இருந்து பஸ் நிலையம் வரையிலும், சின்ன காரியாபட்டி பஜாரில் இருந்து பஸ் நிலையம் வரையிலும், பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து முக்குரோடு வரையிலும், எஸ்.வி. எஸ். திருமண மண்டபத்தில் இருந்து முக்கு ரோடு வரையிலும் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். ஆதலால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து ெநரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் முறையாக அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.