அழைப்பிதழ் ெகாடுப்பது போல் வீடுபுகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறிப்பு

அழைப்பிதழ் கொடுப்பது போல் வீடுபுகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2022-10-28 18:34 GMT

பேரையூர்,

அழைப்பிதழ் கொடுப்பது போல் வீடுபுகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

அழைப்பிதழ் ெகாடுப்பது போல்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்குமணி (வயது 70) இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்தார். அப்போது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க 3 பேர், ருக்குமணியின் வீட்டுக்குள் வந்து, உங்கள் கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அதனால் கணவரின் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டனர். ருக்குமணி தனது கணவர் ரவியின் போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல் நடித்ததுடன், அதில் ஒருவர் வீட்டின் கதவை நைசாக பூட்டி உள்ளார்.

சங்கிலி பறிப்பு

மற்ற 2 பேரும், சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று ருக்குமணியை மிரட்டி அவரின் கை, கால்களை கட்டி உள்ளனர்.

பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே காலில் கட்டப்பட்டு இருந்த கட்டு அவிழ்ந்ததால் எழுந்து வந்த ருக்குமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ருக்குமணி டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்