வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி 11 பவுன் நகை பறிப்பு

வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி 11 பவுன் நகையை பறித்து சென்றனர்.

Update: 2022-12-21 20:58 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள சசிநகரை சேர்ந்த ஜெயசங்கர் மனைவி ஜான்சிராதா (வயது60). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டில் உள்ள டி.வி. பழுது அடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்ய வந்து இருப்பதாகவும் மூதாட்டியிடம் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த டி.வி.யை ஆன் செய்து பார்த்த போது டி.வி. பழுது இல்லாமல் நல்ல நிலையில் இருந்தது.. இதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த ஜான்சிராதா சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தி உள்ளார். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு மூதாட்டியின் கழுத்தில் இருந்து கத்தியை எடுக்காமல் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சிராதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஜான்சிராதாவிடம் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்