வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.;
சாய்பாபாகாலனி
கோவை வேலாண்டிபாளையம் கொண்டசாமி வீதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கல்யாணி (வயது 71). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். முதல் மாடியில் அவரது மகன் வசிக்கின்றார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை கண்டதும் மூதாட்டி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் மூதாட்டியின் வாயை பிளாஸ்திரி மூலம் கட்டினார்.
பின்னர் அந்த நபர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.