பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி

Update: 2023-04-12 19:37 GMT

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகளும், மின் அலங்கார தேர் பவனியும் நடைபெற்றது. 2-வது நாள் நடந்த நிகழ்ச்சியில் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தது. பின்னர் மலர்கள் மின்னொளி அலங்காரத்தில் தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

முன்னதாக பாபநாசம் மேலவீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-வது நாள் நடந்த நிகழ்ச்சியில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது. மாலை கொடி இறக்கம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை அன்பியங்கள், பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்