விபத்தில் அனல் மின் நிலைய ஊழியர் காயம்

குலசேகரன்பட்டினம் அருகே விபத்தில் அனல் மின் நிலைய ஊழியர் காயம் அடைந்தார்.

Update: 2023-07-25 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

கடலூர் மாவட்டம் தொழுதூர் திட்டக்குடி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் மனோஜ் (வயது 24). உடன்குடி கல்லாமொழி அனல்மின்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் செல்லும் போது எதிரில் வந்த லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்துமனோஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்