சாலைக்கிராமம் பகுதியில் நாளை மின்தடை
சாலைக்கிராமம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும்.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சாலை கிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதான்கோட்டை, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், பஞ்சனூர், சமுத்திரம், அளவிடங்கான், பூலாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் அறிவித்துள்ளார்.