பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
காரையாறு பேச்சியம்மன் கோவில் கொடை விழாவுக்கு சென்ற பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் கொடை விழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று கொடை விழாவில் பங்கேற்பதற்காக கோவிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே மாலை 4 மணிக்கு மேல் வந்த பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பக்தர்கள் காரையாறு செல்லும் அரசு பஸ்ஸில் செல்ல தயாரான நிலையில் வனத்துறையினர் பஸ்சில் செல்ல அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து பக்தர்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.