டீக்கடையில் தகராறு செய்தவரை கைது செய்யக்கோரி வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு

பாவூர்சத்திரம் அருகே டீக்கடையில் தகராறு செய்தவரை கைது செய்யக்கோரி வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-19 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கருப்பசாமி (வயது 35). இவர் முத்துகிருஷ்ணபேரி மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அத்தியூத்தைச் சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் என்ற மாடசாமி (30), கருப்பசாமியின் டீக்கடைக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுரேசை கைது செய்ய வலியுறுத்தி முத்துகிருஷ்ணபேரியில் கடையடைப்பு நடத்த முடிவு செய்து, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜன், வியாபாரி சங்கங்களின் தலைவர் ஹரிகிருஷ்ணன், சங்க மாவட்ட செயலாளர் கணேசன், செய்தி தொடர்பாளர் இமானுவேல் ராஜன் உள்ளிட்டோர் அங்கு திரண்டு வந்தனர். மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டு, தகராறில் ஈடுபட்ட சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் ஜெயபால் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேசை கைது செய்து பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அடைக்கப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்