ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததால் பரபரப்பு
ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததால் பரபரப்பு எற்பட்டது.
ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததால் பரபரப்பு எற்பட்டது.
திருவண்ணாமலையில் வேலூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாடிக்கையாளர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. அதை அந்த வாடிக்கையாளர் எடுத்து ஊழியர்களிடம் கூறினார். அப்போது அதைப்பார்த்த மற்றொரு வாடிக்கையாளர் பூச்சியை மற்றவர்களிடம் காட்டவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.