காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு

பந்தலூர் அருகே காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-26 23:00 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எருமாடு அருகே இன்கோ நகரில் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இன்டர்லாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த பின்னர் அந்த பகுதியில் காந்தி படத்துடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெயர் பலகையில் இருந்த காந்தி படம் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து கிடக்கிறது. அரசு திட்ட பணி முடிவுற்ற பின்னர் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இருந்து காந்தி படம் விழுந்து கிடக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மகாத்மா காந்தி மீண்டும் பெயர் பலகையில் ஒட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்