8 பேர் இறந்ததாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் இறந்ததாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-28 17:55 GMT

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் ஒரு தனியார் பல் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நியூடவுனை சேர்ந்த ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்து போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பொதுமக்களும், இறந்து போன நபரின் உறவினர்களும் முற்றுகையிட்டு தகராறு செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் இது குறித்து மருத்துவத்துறை விசாரணைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

அன்று முதல் அந்த மருத்துவமனை மூடப்பட்டு இருந்தது இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அங்கு வந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையின் மூலம் 8 பேர் இறந்ததாக, அவர்களின் பெயர், ஊர் விவரங்களுடன் ஒட்டி, இந்த மருத்துவமனையை திறக்கக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர். மேலும் சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனால் கச்சேரி ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்