கிழவிப்பட்டி பகுதியில் திங்கட்கிழமை மின்தடை
கிழவிப்பட்டி பகுதியில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு உபமின் நிலையங்களாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மீதமுள்ள பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கெச்சிலாபுரம், கிழவிபட்டி பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என்று கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.