அய்யன்கொல்லியில் அரசு பஸ் முன் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
அய்யன்கொல்லியில் அரசு பஸ் முன் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்டதால் பரபரப்பு;
பந்தலூர்
பந்தலூர் அருகே தாளுர், எருமாடு, அய்யன்கொல்லி, மூலைக்கடை, கொளப்பள்ளி, வழியாக திருப்பூருக்கு தமிழ்நாடு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அய்யன்கொல்லி மூலைக்கடை கிராம நிர்வாக அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு சென்றபோது திடீரென்று ஒருவர் ஆட்டோவை பஸ் முன்பு நிறுத்தினார். இதனால் கூடலூர்-பந்தலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், தனிப்பிரிவு காவலர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். பிறகு ஆட்டோ டிரைவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.