கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

திண்டுக்கல்லில், கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-15 16:56 GMT

திண்டுக்கல்லில், கரூர் பைபாஸ் சாலை அஞ்சலி ரவுண்டானா அருகே தனியார் ஓட்டல் முன்பு கடந்த 3 நாட்களாக கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு வந்து காரை சோதனை செய்தனர். மேலும் காரின் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த காரை, அதன் உரிமையாளர் திண்டுக்கல்லில் ஓட்டி வந்தபோது பழுதாகி நின்றது.

இதனால் பழுதை சரிசெய்வதற்காக மெக்கானிக்கை அவர் அழைத்துள்ளார். ஆனால் உடனடியாக காரின் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் ஓட்டல் முன்பு காரை விட்டுச்சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும், காரின் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

அவரை போலீசார் எச்சரித்தனர். அதன்பிறகு அவர், தனது காரை எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்