காந்தி சிலையை எடுத்து சென்றதால் பரபரப்பு

அரக்கோணம் மார்க்கெட்டில் இருந்த காந்தி சிலையை எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-07 19:13 GMT

அரக்கோணம் போலீஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் 250 கடைகளுடன் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது. மார்க்கெட் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இறைச்சி விற்பனை கடைகள் மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளில் உள்ள வணிகர்கள் பலர் கடைகளை காலி செய்ய கால தாமதம் செய்வதால் இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நகராட்சி மார்க்கெட் நுழைவுப் பகுதியில் இருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அங்கு வந்த சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றதாக கூறபட்டது. இது குறித்து நகராட்சி ஆணையர் ரகுராமனிடம் கேட்ட போது மார்கெட்டின் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெறுவதால் அங்குள்ள காந்தி, அண்ணா, அம்பேத்கர் சிலைகளை பாதுகாப்பாக எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்க ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காந்தி சிலையை பெயர்த்து எடுத்து நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். மார்க்கெட் நுழைவு வாயிலில் இருந்த காந்தி சிலையை எடுத்து சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்