'குண்டுவெடிப்பு, வன்முறை சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்

வன்முறை சம்பவங்களை சாதாரண நிகழ்வுதான் என்று மாநில அரசுகள் புறந்தள்ளிவிடக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-29 19:09 GMT

சென்னை,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து மார்ட்டின் மீது உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குண்டுவெடிப்போ அல்லது வன்முறையோ ஏற்பட்டால் அதை தீர விசாரிக்க வேண்டும். சாதாரண நிகழ்வுதான் என்று மாநில அரசுகள் இதை புறந்தள்ளிவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்