யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை - அண்ணாமலை

வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன என அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-08-22 11:42 GMT

சென்னை,

யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன.என தெரிவித்தார்.

ரஜினிகாந்திடம், நேற்று யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சை ஆகி இருப்பது குறித்து கேட்டபோது," வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் தான் நான் செய்தேன் "என ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்