'செங்கல்பட்டு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை' - அண்ணாமலை பெருமிதம்

பா.ஜ.க. தொண்டர் ஒரு நாள் சிறைக்கு செல்வதன் மூலம் ஒரு வருட கட்சி பணியை ஒரே நாளில் செய்தது முடிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-06-20 16:35 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இன்று பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " பா.ஜ.க. மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

தொடர்ந்து பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "பா.ஜ.க. தொண்டர் ஒரு நாள் சிறைக்கு செல்வதன் மூலமாக, சுமார் ஒரு வருடத்தில் கட்சி செய்யக்கூடிய வேலையை ஒரே நாளில் செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் அது ஒரு பேசும் பொருளாக தமிழகம் முழுவதும் மாறுகிறது.

எனவே கைது நடவடிக்கையால் பா.ஜ.க. சுணங்குகிறது என்று தி.மு.க. நினைக்குமானால், பா.ஜ.க. எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு செங்கல்பட்டில் நடக்கும் பொதுக்கூட்டமே சாட்சி. இங்கு நிற்பதற்கு கூட இடமில்லை. ஒரு ரூபாய் நாணயத்தை கீழே போட்டால் கூட எடுக்க முடியாது. அந்த அளவிற்கு பா.ஜ.க.வின் தொண்டர் படையினர் இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்