திருக்கழுக்குன்றம் அருகே சிதறி கிடந்த மனித எலும்பு கூடால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் அருகே சிதறி கிடந்த மனித எலும்பு கூடால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-19 11:58 GMT

எலும்புக்கூடு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் ஏரியின் அருகில் உள்ள நில பகுதியில் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. அந்த பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற சிலர் மனித எலும்பு கூடு சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் சிதறி கிடந்த எலும்புகளை சேகரித்து மனித எலும்புகள்தான் என்று உறுதி செய்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் விசாரணை மேற்கொண்டார். மனித எலும்புகளை சேகரிக்கும்போது அந்த பகுதி அருகில் உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 2 அடி பள்ளத்தில் மண்டை ஓடு ஒரு பக்கவாட்டில் நொறுங்கிய நிலையிலும் மனித தலை மார்பக எலும்பு உள்ளிட்ட உடல் பாக எலும்புகள் மற்றும் துணிகள் கிடந்ததை கண்ட போலீசார் டாக்டர் உதவியுடன் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனித எலும்பு கூடுகள் இருந்த இடத்தில் ஆண் அணியும் துணிகளும், பெண்கள் அணியும் துணியும் கிடந்ததால் இறந்து போனது ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்