ரூ.11 கோடியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி
ரூ.11 கோடியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
புதூர்நாடு கீழூர் கிராமத்தில் ரூ.11 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிகாட்சி மூலம்திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் ரிப்பன் வெட்டி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர் இமாம் காசிம், ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாச்சலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துக்கன், பிருந்தாவதி வைகுந்தராவ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி ஐயப்பன், அலமேலு செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.