4 தொகுதிகளில் 9,76,841 வாக்காளர்கள் உள்ளனர்
திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 9,76,841 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 9,76,841 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன் படி வாணியம்பாடி தொகுதியில் 1,23,983 ஆண் வாக்காளர்களும், 1,28,386 பெண் வாக்காளர்களும், 45 இதர பாலினத்தவரும் என மொத்தம் 2,52,414 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆம்பூர் தொகுதியில் 1,15,688 ஆண் வாக்காளர்களும், 1,23,348 பெண் வாக்காளர்களும், 34 இதர பாலினத்தவரும் என 2,39,070 வாக்கா்ளர்கள் உள்ளார்கள்.
9,76,841 வாக்காளர்கள்
ஜோலார்பேட்டை தொகுதியில் 1,20,567 ஆண் வாக்காளரும், 1,23,235 பெண் வாக்காளரும், 13 இதர பாலினத்தவரும் என 2,43,815 வாக்காளர்களும், திருப்பத்தூர் தொகுதியில் 1,19,877 ஆண் வாக்காளர்களும், 1,21,635 பெண் வாக்காளர்களும், 30 இதர பாலினத்தவரும் என 2,41,542 வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்டத்தில் 4 உள்ள தொகுதிகளிலும் 4,80,115 ஆண் வாக்காளர்களும், 4,96,604 பெண் வாக்காளர்களும், 122 இதர பாலினத்தவரும் என மொத்தம் 9,76,841 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
பெயர் சேர்க்கலாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான சிறப்பு முகாம்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய 4 நாட்களில் நடைபெறும. இச்சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பதிவுகளை உரிய விண்ணப்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனி தாசில்தார் (தேர்தல்) மோகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.