கல்யாண ராமசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
கல்யாண ராமசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசலில் கல்யாண ராமசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சிறப்பு வழிபாடுகள் மற்றும் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண ராமசுவாமி மற்றும் சீதை, லட்சுமணர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.