தேனியில் ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது

தேனியில் ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பெண்களை போலீசாா் கைது செய்தனர்;

Update: 2022-06-28 13:57 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவாஜி நகர் செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அந்த ஸ்கூட்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதை அவர்கள் விற்பனைக்காக கடத்தி சென்றதாக தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் தேனி விஸ்வதாஸ் காலனியை சேர்ந்த ராம்குமார் மனைவி பிரியா என்ற பிரியங்கா (வயது 28), பின்னால் அமர்ந்து வந்தவர் சக்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி லோகராணி (41) என்பதும், லோகராணி தற்போது சிவாஜி நகரில் வசிப்பதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து பிரியா, லோகராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்