தேனியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
தேனியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோரின் அறிவுறுத்தல்படி தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். தேனி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் தலைமையில் இந்த சோதனை நடந்தது. அப்போது ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்து சுமார் 1 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.