தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி தேனியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

Update: 2022-06-27 16:13 GMT

உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி தேனியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்த ஊர்வலத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பாரஸ்ட்ரோடு, மதுரை சாலை வழியாக பழைய பஸ் நிலையம் வரை சென்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். முன்னதாக கலெக்டர் தலைமையில், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாபு, முருகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் விஜயா, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்