தேனி மாவட்ட அளவில் ஐவர் கால்பந்து போட்டிகள்

தேனி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் தேனியை அடுத்த முல்லைநகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்தது

Update: 2022-07-05 16:29 GMT

தேனி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் தேனியை அடுத்த முல்லைநகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட கால்பந்து கழக தலைவர் கதிரேசன், அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. போட்டி முடிவில் போடி டிராகன் கால்பந்து கழக அணி முதலிடம் பிடித்தது. தேனி எஸ்.டி.முருகேசன் ஜூனியர் கால்பந்து கழக அணி 2-வது இடமும், ஆசாரிப்பட்டியை சேர்ந்த கால்பந்து கழக அணி 3-வது இடமும், ரோசனப்பட்டியை சேர்ந்த கால்பந்து கழக அணி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் மனோகரன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்மின் ஜென்னி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்