தேனி, கண்டமனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
தேனி, கண்டனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி மற்றும் கண்டமனூர் துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, இந்த 2 துணை மின் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கண்டமனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.